திருக்கூடல்மலை நவநீத பெருமாள் குதிரை வாகனத்தில் மானாமதுரைக்கு எழுந்தருளல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 04:08
மானாமதுரை; மானாமதுரை பகுதியில் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் 106வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது.இதையடுத்து மலையில் இருந்து குதிரை வாகனத்தில் கிளம்பிய சுவாமிகள் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை ஆகிய ஊர்களின் வழியே 24 நாள்கள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.வழியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. நேற்று மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு எழுந்தருளிய நவநீத பெருமாள் இரவு மானாமதுரை,தாயமங்கலம் ரோட்டில் உள்ள முருகன் கோயிலுக்கும், வைகைக்கரை அய்யனார் சோனையா சுவாமி கோயிலுக்கும் எழுந்தருளினார்.அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டனர். வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.