இறுதி கட்டப் பணியில் திருப்பரங்குன்றம் சஷ்டி மண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 04:08
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக கட்டப்படும் புதிய மண்டபத்தில் இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் ஆறு நாட்களும் பெண் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டிக்கொண்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்கள், வளாகத்திலுள்ள சஷ்டி மண்டபம், வள்ளி, தேவசேனா மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் காலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர். ஆண்டுக்கு ஆண்டு சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சஷ்டி பக்தர்கள் தங்குவதற்காக பாலாஜி நகர் பகுதியில் ரூ. 4.50 கோடியில் புதிய சஷ்டி மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. கட்டடப் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகளாக கார் பார்க்கிங், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது.