திருப்பதி; வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறவுள்ள திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநில அரசின் சார்பில், செப்டம்பர் 24 அன்று ஆண்டு பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான கருட சேவை – செப்டம்பர் 28ல் நடக்கிறது.சக்ர ஸ்நானம் – அக்டோபர் 2ல் நடக்கிறது.