கொண்டத்து காளியம்மன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு
பதிவு செய்த நாள்
20
ஆக 2025 05:08
பெருமாநல்லூர்; பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் அறங்காவலர்களாக மனோகரன், சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்வு அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ்வாணன் முன்னிலையில் நடந்தது. மனோகரன், தலைவராக தேர்வாகி பதவியேற்று கொண்டார். பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின் தாளாளராக மனோகரன் உள்ளார். தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், மேயர் தினேஷ் குமார், முன்னாள் அறங்காவலர்கள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆய்வாளர் மகேந்திரன், தக்கார் சபரீஷ்குமார், செயலர் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரர் பங்கேற்றனர். அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் கூறுகையில், ‘‘கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் பல திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமண மண்டபம், அன்னதான கூடம் கட்டும் பணியும் நடக்கிறது. உபயதாரர் பங்களிப்பில் வசந்த மண்டபம், குறிஞ்சி மண்டபம், ஆஞ்சநேயர் கோவில், ராஜ கோபுரம் உள்ளிட்டவை கட்ட அரசு அனுமதி வழங்கி உள்ளது. அனைத்து திருப்பணிகளும் முடிவுற்றதும், கும்பாபிேஷகம் விமரிசையாக நடத்தப்படும்,’’ என்றார்.
|