பிட்டுக்கு மண் சுமந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2025 10:08
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா ஆக.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இன்று பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10ம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று காலை தீர்த்தவாரி உற்சவமும், மதியம் மோதகம் படையலும் நடைபெறும். இந்நாளில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகரை தரிசனம் செய்வார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். முக்கிய நிகழ்வாக ஆக., 26 தேரோட்டம், ஆக., 27 தீர்த்த வாரி உற்ஸவம் நடக்கிறது.