மேலூர்; மேலவளசை மலையம் பெருமாள் சுவாமி ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குதிரை பொட்டலில் இருந்து புரவிகள் மந்தை கருப்பணசாமி கோயில் முன் உள்ள பொட்டலுக்கு கொண்டு செல்லபட்டது. நேற்று மாலை அங்கிருந்து புரவிகளை ஒரு கி. மீ., தொலைவில் உள்ள மன்ற மலையின் மீது உள்ள மலையம் பெருமாள் சுவாமி கோயிலுக்கு பக்தர்களுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.