புதுச்சேரி; கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடத்தது. புதுச்சேரி, கருவடிக்குப் பம் இடுகாட்டில் சந்திரமதி தாயார் உடனுறை அரிச்சந்திரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் பரிகார தோஷங்கள் தீர்க்கும் மயான காளிக்கு கலசாபி ேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் புண்ணியாதனம் ஹோமம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்திர ஹோமம் , பூர்ணாஹூதி, திபாராதனை, அரிச்சந்திரன், சந்திரமதி, யோகிதாஸ் நித்திய பூஜை, இரவு மகா பைரவர் மற்றும் பைரவிக்கு வடுக பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பஞ்சபூத பூஜை, மகா ஏகதச ருத்ர ஹோமம், மகா காளி ஹோமம், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தோஷங்கள் தீர்க்கும் பரிகார மயான காளிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய பரிபாலகர் ரவி, நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், தினேஷ் ஆகியோர் செய்தனர்.