கற்பக விநாயகர் கோவில் ஆண்டு விழா; அவிநாசியில் இருந்து தீர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 10:08
திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையம், ராக்கியாபாளையம் ரோடு, பழனியப்பா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் 17ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. ஆண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம், அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. மாலையில் பரதநாட்டியம் மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, கணபதி ேஹாமம், அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.