வடமதுரை; வடமதுரை ஒன்றியத்தில் கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா, பா.ஜ., ஊர் மக்கள் சார்பிலும் ஆங்காங்கே சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து அன்றோ அல்லது ஒரிரு நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பர். இதற்காக இடம் பிடிப்பதில் போட்டா போட்டி ஏற்படும் நிலையில், வடமதுரை பகுதியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் 23 இடங்களில் சதுர்த்தி விழாவிற்காக இந்தாண்டு ஒருநாள் முன்னதாக இன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவ்விழாக்களில் மாவட்ட தலைவர் நாகராஜ், ஒன்றிய தலைவர் அய்யப்பன், செயலாளர் ராஜாராம், செய்தி தொடர்பாளர் ராகவன் பங்கேற்றனர். இந்த சிலைகளில் ஆக.31ல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நரிப்பாறை பாறைக்குளத்தில் கரைக்கப்படுகிறது.