ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2025 08:08
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் முடிந்த பின், நேற்று புது பள்ளியறை பூஜை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஜூலை 30ல் ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 8:10 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி, அம்மன் சன்னதியில் அலங்கரிக்க பட்ட வள்ளியறையில் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட புது பள்ளி அருகில் எழுந்தருளினார் அங்கு சுவாமி அம்மனுக்கு கோவில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர் இதில் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் கோயில் ப்ளேஸ் கார் பஞ்சமூர்த்தி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.