பதிவு செய்த நாள்
29
ஆக
2025
08:08
தொண்டாமுத்தூர்; கைலாய யாத்திரையின் போது, நடிகர் மாதவனுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடிய போது, கைலாயம் என்பது இந்த பூமியிலேயே அல்லது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மிக நூலகம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, சமீபத்தில், இரண்டு சவாலான மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், சத்குரு முதன்முறையாக, 17 நாட்கள் பைக் பயணம் மூலம், கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் இடையில், நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் வரும் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோருடன், சத்குரு ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் நடிகர் மாதவனுடன், சத்குரு பேசுகையில்,"கைலாயம் என்பதை வார்த்தைகள் மூலம் யாராலும் விளக்கவோ, விவரிக்கவும் முடியாது. எப்படிப்பட்ட இடம் என்றால், ஆதியோகி சிவனே முழுமையாக இருக்கக்கூடிய இடம். இதனை இந்த பூமியிலேயே அல்லது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மிக நூலகம் என்று கூற முடியும். சிவனின் ஜடாமுடி என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு இலையிலேயும் ஞானம் சேமிக்கப்பட்டு இருக்கின்றது. அது வேறு விதமான ஒரு ஞான நிலை. இந்த பிரபஞ்சம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் இங்கு இருக்கிறது,"என்றார்.