கள்ளக்குறிச்சி விஷ்ணு துர்கை கோவிலில் மகா பிரத்யங்கரா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 10:09
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் மகா பிரத்யங்கரா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் மகா பிரத்யங்கரா யாகம் மற்றும் 108 தீர்த்தக்குட அபிஷேகம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. கோவில் அருகே யாக குண்டங்கள் அமைத்து மகா கணபதி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 108 பக்தர்கள் கோமுகி நதிக்கரையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலை 6:00 மணிக்கு ராஜபந்தனம், கலச ஆவாஹனம், முதற்கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, மங்கள திரவிய ஹோமம், துர்கா ஹோமத்துடன் இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டது. காலை 10;௦௦ மணிக்கு தீர்த்தக்குட அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கட்டது. இரு தினங்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து வார்டு கவுன்சிலர் ஞானவேல் செய்திருந்தார்.