காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் செப் 22ம் தேதி துவங்குகிறது. இங்கு நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, செப் 21ம்தேதி அனுக்ஞை, சண்டி ஹோமம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், ஆகிய நிகழ்ச்சியும், இரவு மிருத்ஸங்கிரஹணம், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி உற்சவம் துவங்க உள்ளது. நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு தினமும் காமை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களும், நவாவர்ணபூஜை, கன்யா பூஜை, மற்றும் ஸூகாயினி பூஜை முதலியனவும் இரவில் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் விசேஷ அலங்காரம் செய்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளச்செய்வித்து சூரஸம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனை மற்றும் சங்கீத கச்சேரிகளும் நடைபெற உள்ளது. நிறைவு நாளான அக்.4ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் தேவி நவராத்திரி மஹோத்ஸவ அழைப்பிதழ் திருப்பதியில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் முன் வைக்கப்பட்டு ஆசி பெறப்பட்டு பக்தர்களுக்கு வழங்கபட்டது.