செம்பை வைத்யநாத பாகவதர் 129வது பிறந்த நாள் விழா; இரண்டு நாள் இசை கச்சேரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2025 01:09
பாலக்காடு; பாலக்காடு அருகேயுள்ள கோட்டாயி செம்பை கிராமத்தில், கர்நாடக இசையில் பிரபலமான செம்பை வைத்யநாத பாகவதரின் 129வது பிறந்த நாள் விழா, செம்பை வித்யாபீடம் சார்பில் 13, 14ம்ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நடைபெறும் இன்னிசை விழாவை, மாவட்ட ஊராட்சி தலைவர் பினு மோள் 13ம் தேதி மாலை 06:15 மணிக்கு, செம்பை பாகவதரின் உருவச்சிலை முன் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைக்கிறார். தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு அபிராம் உண்ணி குழுவின் சங்கீத கச்சேரி நடக்கிறது. முன்னதாக பிற்பகல் 3:00 மணிக்கு மஞ்சேரி சுவாதிதிருநாள் சங்கீத குருகுல மாணவர்களின் சங்கீதாராதனையும் கண்ணூர் செம்பை சங்கீத பவன் மற்றும் திருச்சூர் வலப்பாடு தியாக பிரம்ம சபையில் உள்ள இளம் இசைக் கலைஞர்களின் சங்கீதக் கச்சேரியும் நடைபெறுகிறது.
செப். 14ல், செம்பை வித்யா பீடத்தின், 39வது ஆண்டு விழாவை, மாஜி அமைச்சர் ஏ.கே.பாலன், துவக்கி வைக்கிறார். இதனையடுத்து, மண்ணூர் ராஜாகுமாரன் உன்னியின் இன்னிசை நடக்கிறது. முன்னதாக காலை செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கீதாரதனையும் மாலினி ஹரிஹரனின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொள்ளும் விழாவின் ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளதாக செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கிழத்தூர் முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.