Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் ரூ.75 லட்சம் வசூல்! திருமலையில் 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் ரூ.5,000க்கு விற்பனை! திருமலையில் 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலி பூஜை பொருட்கள் அறநிலைய துறை மவுனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2012
10:12

தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 421 கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000க்கு குறையாமலும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, பூஜை பொருட்கள் விற்பனை செய்ய, அனுமதி வழங்கிஉள்ளதால், அரசுக்கு, கணிசமான வருவாய் கிடைக்கிறது. கோவில்களில் விற்பனை செய்யப்படும் போலி பூஜை பொருட்களால், பக்தர்கள், பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பாலான கோவில்களில், அதிக ரசாயனம் கலந்த குங்குமம் விற்கப்படுகிறது. அதை நெற்றியில் வைத்தால், புண் ஏற்படுகிறது. திருமணமான பெண்கள், தலை வகிட்டில் பொட்டு வைத்தால், தலைமுடி கொட்டி, அங்கு முடி முளைப்பதில்லை. கோவில்களில் வழங்கப்படும் திருநீறில், சுண்ணாம்பு கலந்து கொடுப்பதால், திருநீறு பூசும் பக்தர்களுக்கு, நெற்றியில் அரிப்பு ஏற்படுகிறது. குண்டம் திருவிழா நடக்கும் கோவில்களில், குண்டத்தில், ஆண்டுதோறும் மிளகு, உப்பு தூவினால், பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். மிளகு விலை உயர்ந்துள்ளதால், அதற்கு பதில், காய வைத்த பப்பாளி விதையே, மிளகாக வழங்கப்படுகிறது. கோவில்களில், பக்தர்கள் வைக்கும் அகல் விளக்கை, மீண்டும் சுத்தம் செய்து, அங்குள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் எலுமிச்சை, வாழைப்பழம், தேங்காய், நெய், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை, அருகே உள்ள கடைகளில் விற்று, சில கோவில் நிர்வாகங்கள் லாபம் பார்க்கின்றன. இது போல், பல மோசடிகள் கோவில்களில் நடக்கின்றன. அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, வியப்பாக இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar