புதுச்சேரி; பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, லாஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியை மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடி 75வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் மாநிலம் முழுதும் சேவைவாரமாக கொண்டாடப்படுகிறது. லாஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தங்கத்தேரை இழுத்து துவக்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீபாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, உழவர்கரை மாவட்டத் தலைவர் உலகநாதன், மாநில மருத்துவ பிரிவு தலைவர் சிவபெருமான், மாநில பட்டியல் அணி தலைவர் காத்தவராயன், மாநில இளைஞரணி தலைவர் வருண், மாநிலத் துணைத் தலைவர் சரவணன், ஜெயலட்சுமி, மாநில மீடியா தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் கதிர்காமம், இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் ரத்ததான முகாம் ,ஸ்வச் பாரத் , மரம் நடும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 2ம் தேதி வரை நடத்தப்படுகிறது.