கோவில்பாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2025 11:09
பொங்கலூர்; பொங்கலூர் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி கணபதி ஹோமம், கோமாதா பூஜை, உலக அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடந்தது. பொங்கலூர் பிரபஞ்ச பீடம் பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள், கொங்கு மண்டல நாராயண ஜீயர் சுவாமிகள், சிவபுரம் அருட்சோதி தபோவனம் தம்பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருந்தொழுவு ஸ்ரீ பாண்டீஸ்வர சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாக வேள்வி, மகா அபிஷேகம், தீர்த்த அபிஷேகம், அன்னதானம் நடந்தது. பொங்கலூர் பெருந்தொழுவு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ வின்னளந்த பெரிய பெருமாள் கோவிலில் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை நடந்தது.