Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ... கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி பிரம்மோத்ஸவம் கருட கொடி இறக்கத்துடன் நிறைவு கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி தட்சிண காளிகாதேவி கோயிலில் மகா ​​கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி தட்சிண காளிகாதேவி கோயிலில் மகா ​​கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
10:10

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண காளிகாதேவி கோயிலில் மகா ​​கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் மண்டபத்தின் புனரமைப்புக்கான மூன்று நாள் செயல்முறையான மகா சம்ப்ரோக்ஷண ​​கும்பாபிஷேகம் விஜயதசமி நாளில் நடைபெற்றது. 


விழாவில் ஓங்கோல் சனாதன சங்கரி பீடத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ  நரசய்யாச்சாரி சுவாமிகள் தலைமையில், சுப்ரபாதம், வேத பாராயணம், கணபதி பூஜை, ரக்ஷாபந்தன் கங்காஜல பூஜை, கோபூஜை, லட்சுமி யாக அலங்காரம்,  மகா கும்பாபிஷேகம் உள்ளிட்டவை மூன்று நாட்கள் நடந்தது. சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், அனைத்து கடவுள்களின் ஹோமம், தட்சிண காளி மகாகால ஹோமம், மஹா பூர்ணாஹுதி, திக்தேவதா பலி, தட்சிண காளிகா தேவதா அர்ச்சனை, மகா நைவேத்ய சஹித நீராஜனம் உள்ளிட்ட வாஸ்து ஹோமம், நவக்கிரக பூஜைகள் நடந்தன. பின்னர், விஜயதசமி நாளான நேற்று மதியம் கோபுர கலசம் மற்றும்( அந்தராலய ) மூலவர் காளி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நன்கொடையாளர் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாட்டாளர்களான  கோபிநாத் ரெட்டி - கீர்த்தி ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காளி அம்மன் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று, தேவியை தரிசனம் செய்து தீர்த்தப் பிரசாதங்களை பெற்று சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar