முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் விஜயதசமி அம்பு விடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2025 10:10
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமிகு விழா நடந்தது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தார். விஜயதசமி நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வில் அம்புடன் புறப்பட்டார். நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார பொட்டலில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் சிவாச்சாரியார் வில்லிலிருந்து அம்புகளை எய்தார். தூரத்தில் விழுந்த அம்புகளை பக்தர்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.