Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெறும்பூர் ஐயப்பன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் மலைமேல் பால்குடம் கொண்டு செல்ல தடை விதித்த போலீசார் திருப்பரங்குன்றம் மலைமேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; சுனை தீர்த்தத்தில் 16 வகை அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; சுனை தீர்த்தத்தில் 16 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 அக்
2025
04:10

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடந்தது.


நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீரி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா இன்று நடந்தது. இன்று காலை மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பொதுபூஜை முடிந்து, கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுப்ரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறையின் அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து கோயில் சிவாச்சாரியார்கள் தங்கவேலை சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 120படி அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. வழக்கமாக 105 படியில் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல் மற்றும் சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கும்.  அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், சுமதி, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர். வேல் மலைமேல் செல்லும் விழாவிற்காக கோயிலில் கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar