தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை கைலாசநாதர் கோயிலின் நவகிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வருக்கும் குதிரைவாகனமே அமைந்திருக்கிறது. குருவும் சுக்கிரனும் எட்டுக் குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்திரன் பத்துக்குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இங்குள்ள நந்திக்கு தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது இன்னொரு விசேஷமாகும். இத்தலத்தில் உறையும் பைரவருக்கு ஆறு கரங்கள் உள்ளன. தவிர, இத்தலத்து ஈசன் வேதத்தின் அம்சமாகக் கருதப்படுவதால், பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. சிவலிங்கத்தின் பீடம் தாமரை மலர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றுமொரு சிறப்பாகும்.