பானி பாத்திரர் என்பவர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகி. நாட்டின் தென்பகுதியில் இருந்து திருவண்ணாமலை வந்து தங்கியவர். மலையடிவாரத்தில் ஒரு மடம் கட்டிக் கொண்டு அண்ணாமலையாரின் சேவையில் ஈடுபட்டவர். இவர் பிரம்ம தீர்த்த நீரை அண்ணலின் திருமஞ்சனத்துக்காக எடுத்துச் செல்ல விரும்பியபோது, நீரே பாத்திரவடிவில் இவருடைய கைக்கு வந்ததாம். அன்று முதல் இவருடைய கிரிதேவர் என்கிற இயற்பெயர் மறைந்து பானி (நீர்) பாத்திர சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து தமது பணியில் வைக்க விரும்பி அண்ணாமலையார் தினம் ஒரு பொற்காசை இவருக்கு அருளிய துண்டு. அதைக்கொண்டு அன்பர்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறார் இவர்.