நாகப்பட்டினம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரருக்கு வில்வமும், அன்னை அபிராமிக்கு ஜாதிமல்லியும் தல விருட்சமாக உள்ளன. மார்க்கண்டேயன் அபிஷேகத்திற்காக கங்கை நீரைக் கொண்டு வந்த போது அதனுடன் பிஞ்சிலம் எனும் ஜாதிமல்லிக் கொடியும் சேர்ந்து வந்தது. அதனால் அதுவும் தலவிருட்சமானது. திருக்கடையூர் தலத்தின் உட்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதியருகே மேடை கட்டி ஜாதிமல்லிக்கு பூஜையும் நடக்கிறது. ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும் இந்த ஜாதிமல்லி, சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படும். இந்தக் கொடியில் உள்ள ஒரு ஜாதிமல்லி பூவால் அர்ச்சிப்பது ஆயிரம் முறை இறைவனை அர்ச்சிப்பதற்குச் சமம்.