மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2025 11:10
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை: பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவரும் நேற்று இரவு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் தங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.,30) நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் நேற்று மாலை 6:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் தியாகராஜன், எம்.பி., மாணிக்கம் தாகூர், கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவருக்கு பா.ஜ., நிர்வாகிகள் திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர். பின் அங்கிருந்து காரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மாலை 6:20 மணிக்கு சென்றார். அவருடன் பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். அவருக்கு கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு மணிநேரம் சுவாமி தரிசனம் செய்த அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டார்.