Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: ராஜயோகம் காத்திருக்கு! ... தனுசு: சுகமோ சுகம் பணமோ பணம்! தனுசு: சுகமோ சுகம் பணமோ பணம்!
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
விருச்சிகம்: நல்ல காலம் வந்தாச்சு நன்மை சூழ்ந்தாச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
03:12

தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே!

புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள கேது, வருடம் முழுவதும் நல்ல பலன்களை வழங்குகிறார். குரு ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து மே 28 மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிற வரையில் ஆசீர்வாதத்துடன் கூடிய மங்கல பலன்களைத் தருகிறார். நட்பு கிரகங்களான சனி, ராகுவின் அமர்வு ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளது. இருப்பினும் உங்கள் மனதில் புத்துணர்வும், செயல்களில் பரிமளிப்பும் இருக்கும். துவங்குகிற செயல்கள் அத்தனையும் பூரண வெற்றியைத் தரும். ராகு, சனியின் பார்வை உங்கள் வாக்கு ஸ்தானத்தில் பதிவதால், எவரிடமும் பொறுப்புணர்வுடன் பேசுவது நல்லது. சமூகத்தில் பெற்ற புகழை நற்பணிகள் செய்து பாதுகாத்திடுவீர்கள். தம்பி, தங்கையின் திருமண நிகழ்ச்சி வருட பிற்பகுதியில் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றி வாழ்த்து பெறுவீர்கள். பூர்வ சொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். புத்திரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு படிப்பு, பிறதிறமைகளில் நல்ல முன்னேற்றம் பெறுவர். புத்திரர்களின் விருப்பங்களை தாராள செலவில் நிறைவேற்றி மகிழ்வீர்கள். குலதெய்வ வழிபாட்டை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் நல்லவிதமாக அமையும். பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வம்பு, விவகாரம் அணுகாத சுமூக வாழ்வியல் நடைமுறை உருவாகும். கடன்களை அடைக்க கடும் முயற்சியின் பலனாக பணவசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒத்த கருத்துடன் நடந்து குடும்பப்பெருமையை உயர்த்துவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர்களிடம் நன்மதிப்பும் ஏற்படும். நண்பர்கள் முக்கிய தருணங்களில் நல்ல ஆலோசனைகளைத் தந்து மனதில் முக்கிய இடம் பெறுவர். மூத்த சகோதரர்கள் தந்தைக்கு நிகரான கவனத்துடன் உங்களை வழிநடத்துவர். தொழில் சார்ந்த வகையில் உள்ள இடையூறுகளை சரிசெய்து நல்ல வளர்ச்சி, தாராள பணவரவு பெறுவீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு ஓரளவு அனுகூல பலன் உண்டு.

தொழிலதிபர்கள்: உற்பத்தி நடைமுறையில் சீர்திருத்தங்களை பின்பற்றி வியத்தகு இலக்கை அடைவீர்கள். பொருட்களின் தரம் உயர்ந்து புதிய ஒப்பந்தங்களை பெற்றுத்தரும். தாராள லாபம் கிடைக்கும். புதிய தொழிற்கருவிகள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கி நிர்வாகத்திற்கு தேவையான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். சுபநிகழ்ச்சியை தாராள செலவில் நடத்துவீர்கள்.

வியாபாரிகள்: விற்பனையைப் பெருக்க ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவதால் விற்பனையில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். அறப்பணி செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சுமூக சூழ்நிலை அமைந்து உற்சாகமுடன் செயல்படுவர். குறித்த காலத்தில் பணி இலக்கு எளிதில் நிறைவேறும். ஓரளவு சலுகை கிடைக்கும். சக பணியாளர்கள் பணி சார்ந்த தொழில்நுட்பங்களை உங்களுக்கு கற்றுத் தருவதால் வேலை எளிமையாகும். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் லட்சிய மனதுடன் செயல்பட்டு சிறப்பு சேர்த்திடுவர். நன்மதிப்பு, பாராட்டு, ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக நடந்து, குடும்பப் பெருமையை பேணுவர். சீரான பணவசதி கிடைத்து நல்வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளுக்கான நிதியுதவி கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை உயர்ந்து திருப்திகர பணவரவைத் தரும். ஆபரணச் சேர்க்கை பெறுவீர்கள்.

மாணவர்கள்: ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் உயர்ந்த தேர்ச்சி அடைவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பு தொடர்பான கருத்துக்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்வர். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த வாகனம் வாங்க பெற்றோரின் அனுமதியும் பண உதவியும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: பொது நீதி, நேர்மையை பாதுகாக்கும் வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வர். இதனால் ஆதரவாளர்களிடம் கூடுதல் மதிப்பும் எதிர்ப்பாளர்களிடம் உங்களைப்பற்றிய மதிப்பீட்டில் மாற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த கவுரவமான பதவி கிடைக்கும். அரசு அதிகாரிகள் திட்டங்கள் நிறைவேற உங்களுக்கு உறுதுணை புரிவர். புத்திரர்களின் ஆலோசனை உங்கள் செயல்களுக்கு ஊக்கம் தரும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்களை சேகரிப்பதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். உழைப்புக்கேற்ற மகசூல் கிடைத்து பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். உயர்ரக கால்நடைகள் வாங்க தாராள பணவசதி துணை நிற்கும். சுபநிகழ்ச்சியை வருட முற்பகுதியில் திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாட்டால் குடும்பத்தில்மங்கல நிகழ்வு ஏற்படும்.

பரிகாரப் பாடல்:
உலகம் அனைத்தும் ஈன்றவளே!
உயிர்கள் எல்லாம் காப்பவளே!
ஊக்கமும் உணர்வும் கொடுப்பவளே!
எங்கும் நிறைந்த பரம்பொருளே!
ஐங்கரன் தன்னை ஈன்றவளே!
ஈசனிடத்தில் அமர்ந்தவளே!
ஈடில்லா காந்தி உற்றவளே!
இடர்களை களைவாய் பகவதியே!

ஜனவரி: ராசிநாதன் செவ்வாயும், குருவும் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளனர். மற்ற கிரகநிலைகளும் பரவாயில்லை. பணம் நாலாபுறம் வந்து கொண்டிருக்கும். எதிரிகளும் வியக்கும் விதத்தில் முன்னேறுவீர்கள்.

பிப்ரவரி: குருபலத்தால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மகப்பேறு ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வீடு, நிலம் வாங்கும் யோகமுண்டு. ஆடை, ஆபரணம் சேரும். தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும். உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும்.

மார்ச்: தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டாகும். சிலர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்புண்டு. படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு இது பொன்னான காலகட்டம். அரசாங்கத்தால் பதவி, பாராட்டு கிடைக்கும் வாய்ப்புண்டு.

ஏப்ரல்: சுபநிகழ்ச்சி நடத்தும் சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் குடிகொள்ளும். தொலைதூரத்தில் இருந்து சுபசெய்திகள் வந்துசேரும். வருமானம் அதிகரிக்கும்.

மே: செவ்வாய் பலத்தால் புதிய மனை, வீடு வாங்குவீர்கள். வங்கி நிதியுதவியுடன் புதிய தொழில் தொடங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும்.

ஜூன்: குரு எட்டாம் இடத்திற்குச் செல்வது நல்லதல்ல. ஏழரையின் தாக்கம் அதிகமாகும். பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவைப்படும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம்.

ஜூலை: குடும்பத்தில் சண்டை சச்சரவு தலைகாட்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள இடமுண்டு. முன்யோசனையுடன் செயல்பட்டால் பிரச்னை குறையும். அனுபவசாலிகளின் வழிகாட்டுதலைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.

ஆகஸ்ட்: சூரியபலத்தால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். சுபவிஷயங்களில் தடை பல உணடாகி விலகும். உடல்நிலை அதிருப்தி அளித்தாலும் மன தைரியத்தால் பணிகளைச் சரிவர செய்து முடிப்பீர்கள்.

செப்டம்பர்: வருமானம் சீராக இருக்கும். நண்பர்களின் உதவியைக் கேட்டுப் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அனுகூலம் உண்டு. வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். ஆன்மிகத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அக்டோபர்: செவ்வாய் பலமாக இருப்பதால் மனதில் உற்சாகம் நிலைக்கும். ஆறில் கேது இருப்பதால் எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தினருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் நன்மைகள் கூடும். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும். நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு வாய்க்கும் யோகம் உண்டு.

டிசம்பர்: கடின அலைச்சலால் உடலில் சோர்வு தென்படும். நோய்தொந்தரவால் அவதிப்படுவீர்கள். வாகனப்பயணத்தில் கவனம் தேவை. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கண்டு மனம் நெகிழ்வீர்கள்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar