பதிவு செய்த நாள்
19
நவ
2025
12:11
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று நினைவு நாணயம், தபால் தலை வெளியிட்டு பகவான் பாபாவிற்கு, புகழஞ்சலி செலுத்தினார்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி, புட்டபர்த்திக்கு வருகை தந்து பகவானின் மகா சன்னிதியில் தரிசனம் செய்தார். புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ.,23ல் பிறந்தார். ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் கோலாகலமாக நடக்கிறது. விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் மற்றும் உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர். இதையொட்டி, புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது; வரும் 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று காலை புட்டபர்த்தி வருகை தந்தார். அருவருக்கு சிறபான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சன்னிதியில் தரிசனம் செய்தார். காலை 10:30 மணியளவில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். விழாவில் பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். 22ம் தேதி சத்யசாய் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
தினமலர் சேனலில் நேரலை; https://youtu.be/ARr4C8CqOYM