பதிவு செய்த நாள்
23
நவ
2025
10:11
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ஸ்ரீ சத்ய சாய் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் மனிதகுலத்திற்கு ஒரு நித்திய பொக்கிஷம். சொற்பொழிவுகள், கடிதங்கள் அல்லது வாஹினிகளில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு தேடுபவர்களின் இதயங்களில் தொடர்ந்து மலரும் காலத்தால் அழியாத ஞானத்தின் விதையாகும். சாய் என்ற பெயர் ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கம் மற்றும் தெய்வீக தைலம், மனிதகுலத்தை என்றென்றும் ஆறுதல்படுத்தி வழிநடத்துகிறது.
ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 140திற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். புட்டபர்த்தி நகரே விழா கோலம் பூண்டுள்ளது. இன்று காலை ஸ்வர்ண ரதோத்சவத்துடன் துவங்கிய விழாவில், வேதம் மந்திரம் முழங்க பல்வேறு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. விழாவில் தலைமை விருந்தினரான இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். ஆந்திர அரசின் அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கானாவின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திராவின் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு பங்கேற்றுள்ளனர்.