பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; ரதோத்சவத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2025 09:11
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ஸ்வர்ண ரதோத்சவத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ சத்ய சாய் மாணவர்களின் வேதம் மந்திர பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஜனைகளும் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. SSSCT நிர்வாக அறங்காவலர் RJ ரத்னாகர், அனைத்து பிரமுகர்கள் மற்றும் பக்தர்களையும் அன்புடன் வரவேற்றார். விழாவில் தமிழக மற்றும் கர்நாடகாவின் பால் விகாஸ் மாணவர்களின் அழகான கலாச்சார விளக்கக்காட்சிகள் கொண்டாட்டங்களுக்கு பக்தி துடிப்பை சேர்த்தது.
விழாவில் தலைமை விருந்தினரான இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார். விழாவில் ஆந்திர அரசின் அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கானாவின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு. பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
மேலும்
சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025
செய்திகள் »