விழுப்புரம்: விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி குபேரன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு துவங்கி மகாலட்சுமி தாயாருக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தாயார் சுவர்ண லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 1ம் தேதி புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகாலட்சுமி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது.