Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகா ... அறுபடை வீடு ஆன்மிக பயணம்; குன்றத்திலிருந்து இருந்து 200 பக்தர்கள் புறப்பாடு அறுபடை வீடு ஆன்மிக பயணம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

25 நவ
2025
05:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து, அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து . டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் கடந்த 3ம் தேதி நடந்தது. தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ராஜகோபுரத்திற்கு கோபுரத்தில் கலசம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ண தேவராயராரால் 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, தெற்கு ராஜகோபுரம் 192 அடி உயரமும், 82 அடி அகலமும், 115 அடி நீளமும், 9 நிலைகள் கொண்டது. கல்காரம் கிரானோலிதிக் கற்களால் ஆனது. இது விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது கோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி டிச., 4ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar