செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் புனித நீர் குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2025 05:11
கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சன் ஊரணி பகுதியில் பழமை வாய்ந்த செங்காட்டுடைய அய்யனார் கோயில் உள்ளது. நவ., 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு 200 குடங்களில் புனித நீர் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக இன்று 3:00 கீழக்கரை அருகே உள்ள தொண்டாலை மேலக்கரையில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடினர். ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீர் அனைத்து குடங்களிலும் ஊட்டப்பட்டு அங்கிருந்து கொட்டும் மழையிலும், மேளதாளங்கள் முழங்க குதிரைகள் நடனமாடியவாறு செல்ல மாலையில் கோயில் யாகசாலையை வந்தடைந்தனர். யாகசாலை முன்பு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட நீர் ஊற்றப்பட்ட குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நட்டாத்தி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.