பதிவு செய்த நாள்
01
டிச
2025
11:12
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் இழுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன், துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் ஏழாம் நாளான, நவ., 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது, முதலில் விநாயகர் தேர், அடுத்து முருகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில், பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் அண்ணாமலைக்கு அரோகரா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். டிச., 3 அதிகாலை, 4:00 மணிக்கு கோயில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.