Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் கீதா ஜெயந்தி; ... கார்த்திகை செவ்வாய்; கோவில்களில் சிறப்பு வழிபாடு கார்த்திகை செவ்வாய்; கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 டிச
2025
11:12

திருத்தணி.: திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் சுவாமி கோவிலின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது.


கடந்த 29ம் தேதி காலை முதல் யாகசாலை பூஜையும், மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை யாகசால பூஜைகள் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 6:00 மணிக்கு கொடிமரத்திற்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, யோகீஸ்வரி, கடலீஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகளில் உள்ள கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, யோகீஸ்வரி – கடலீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், பின் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், திருத்தணி நகராட்சி சேகர்வர்மா நகரில் புதிதாக கட்டப்பட்ட சக்தி கணபதி கோவிலிலும், நேற்று காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருத்தணி தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar