பழநியில் ஹனுமன் ஜெயந்தி விழா; ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2025 05:12
பழநி; பழநியில் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அனுமன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாலாறு அணை சுயம்பு ராமவீரஆஞ்சநேயர் கோயில், பால சமுத்திரம் வீரஆஞ்சநேயர் கோயில், கரடி கூட்டம், சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது. அதன்பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.