கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2025 11:12
சாத்துார்: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நேற்று காலை 7:00 மணிக்கு மலர் காவடி திருவிழா நடந்தது.
குடவரைக் கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நேற்று நடந்த 12வது மலர் காவடி திருவிழாவில் சிவகாசி, சாத்துார், கோவில்பட்டி, கழுகுமலை, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு மலர் காவடி எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருந்த கழுகாசலமூர்த்திக்கு மலர் அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. மடாதிபதிகள் மலர்க்காவடி சிறப்புகள் குறித்து பேசினர். அன்னதானம் வழங்கப்பட்டது.முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.