மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள்: நாளை சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2025 05:12
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளில் பெருமாள் மோகினி அவதாரத்தில் உலா வந்தார். நிறைவு நாளான இன்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் கொண்டையிட்டு, மோகினி அலங்காரத்தில் கிளி மாலையுடன் உலா வந்தார். இக்கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளதால், நித்திய பரமபதத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதனால் இன்று மாலை மோகினி அவதாரத்தில் சுற்றி வந்த பெருமாள் கோயிலை அடைந்தவுடன் மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து நாளை காலை சிறப்பு தீபாராதனைகள் நடந்து, மீண்டும் 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.