Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆங்கில புத்தாண்டு, பிரதோஷம்: ... திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு திருப்பரங்குன்றம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயம் செழித்து, நாடு நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
எழுத்தின் அளவு:
விவசாயம் செழித்து, நாடு நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
05:01

ஓசூர்; ஓசூரில், விவசாயம் செழித்து, நாடு நலம் பெற, ‘கடலைக்காய் திருவிழா’ நடந்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில், ராகி, நிலக்கடலை போன்ற பல வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் செழித்து, விவசாயிகள் வாழ்வு மேம்பட, நாடு நலம் பெற, ஓசூர் ராஜகணபதி நகரிலுள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில், கடலைக்காய் (நிலக்கடலை) திருவிழா நடப்பது வழக்கம். தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும், ‘கடலைக்காய் திருவிழா’ நடத்தப்படுகிறது. 68ம் ஆண்டு, ‘கடலைக்காய் திருவிழா’ இன்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு மேல், உற்சவமூர்த்தி முன் குவித்து வைத்திருந்த கடலைக்காய்க்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரத்தில் மீது வீசிய கடலைக்காயில் கீழே விழுந்தவற்றை, பக்தர்கள் வீடுகளுக்கு பிரசாதமாக எடுத்து சென்றனர்.  ஏற்பாடுகளை, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும், கோவில் நிர்வாகியுமான மாதேஸ்வரன், கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், சுரேஷ், ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar