Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அருகே கி.பி.15 ஆம் நூற்றாண்டு ... ஆருத்ரா தரிசனம்; உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆருத்ரா தரிசனம்; உலகில் மிகப் பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்: ராஜ வீதிகளில் வீதியுலா வந்த நடராஜ பெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்: ராஜ வீதிகளில் வீதியுலா வந்த நடராஜ பெருமான்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
10:01

தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.


 ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு நேற்றிரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று(3ம் தேதி) காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar