காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 11:01
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் திருவாதரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
சிவபெருமான் திருவதாரை நட்சத்திரத்தில் பிறந்தவர். அந்த நாளில் தான் நிஜ ரூபத்தில் காண முடியும். மற்ற நாட்களில் லிங்க வடிவில் தான் காட்சியளிப்பார். ஆண்டு முழுவதும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் திருவாதரை அன்று நடராசப் பெருமானுக்கு நடைபெறும். மற்ற நாட்களில் நடராசப் பெருமானுக்கு அபிஷேகம் இருக்காது . இன்று காளாத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் காட்சி தந்தார் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்றனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் ரத வீதிகள் வழியாக உலா வந்தார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தரிசனம் செய்தனர். அர்ச்சகர் மணிவாசகம், முத்துப் பாண்டி ஆகியோர் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில்களும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.