குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை விழா: நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 11:01
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். தற்போது சித்திர சபையில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றுள்ளதால் அங்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக குற்றாலநாதர் திருக்கோவில் மண்டபத்தில் வைத்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.