ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாருக்காக, மகளாக அவதரித்தாள் பூமிமாதா. கோதை என்ற பெயர் கொண்ட அவள், மார்கழியில் பாவைநோன்பு நோற்றாள். தான் சூடி அழகு பார்த்த மாலையை திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தாள். விரும்பியபடி ஸ்ரீரங்கம் அரங்கனையே மணாளனாக ஏற்று, அவனையே ஆளும் ஆண்டாள் ஆனாள். புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் 2013 ஜன.13 போகிப்பண்டிகையன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். பெருமாள், தாயார் புறப்பாடு, ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவம், சீதனம் சமர்ப்பித்தல், மாங்கல்ய தாரணம் ஆகியவை நடக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்று முகூர்த்தமாலை பெற்றுச் செல்பவர்களுக்கு விரைவில் திருமணவாழ்வு கைகூடும். காலை11.30- மதியம்1.30, மாலை4- இரவு 8.30 வரை பக்தர்களுக்கு முகூர்த்தமாலை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் மாலை வாங்கி வரவேண்டும். போன்: 98941 99562, 0413-264 4339.