திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 52 வது ஆண்டு ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் சஹஜ சமாதியில் அருள்பாலித்து வரும் ஞானசித்தர் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் இவரது 52 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த மாதம் 21ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் விசேஷ பாத பூஜை, மணிமண்டபம் சத்குரு நாதர் சன்னதியில் மகாதீபாராதனை, அதிர்ஷ்டத்தில் 108 கலச அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், அலங்காரம் மகா தீப ஆராதனை நடந்தது. ஆராதனை தினமான நேற்று காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.