Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோவிலில் துர்க்கை ... கடலுார் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் கடலுார் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2026
05:01

திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது.


புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணையில் தைத்திங்கள் முதல் நாளிலிருந்து ஐந்து தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள பெண்ணையாற்றில் சேர்கிறது என்பது ஐதீகம். அதன்படி சிறப்பு வாய்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதன்படி நேற்று திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பட்டு இன்று மதியம் 12.30 மணிக்கு மணலூர்பேட்டையை வந்தடைந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே மணலூர்பேட்டை மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை மேளதாளம் முழங்க வரவேற்று தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தென்பெண்ணையில் தீர்த்தவாரி முடிந்து, சிறப்பு பந்தலில் சுவாமி எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அண்ணாமலையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மணலூர்பேட்டை பொதுமக்கள் இணைந்து விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar