கடலுார் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 05:01
கடலுார்: கடலுார் பெண்ணையாற்றில் நடந்த ஆற்று திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதனையொட்டி கடலுார் ஆனைக்குப்பம் நாகவல்லி அம்மன், மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன், பெரியகங்கணாங்குப்பம் மன்னாதீஸ்வரர், கொமந்தான்மேடு முத்து மாரியம்மன், உச்சிமேடு எல்லையம்மன் கோவில், பெரியகாட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் உட்பட 35க்கும் மேற்பட்ட சுவாமிகள் பெண்ணையாற்றில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு தீர்த்தவாரி முடிந்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பெண்ணையாற்றில் ஏராளமான கடைகள் மற்றும் சிறுவர்கள் விளையாட ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. விழா காரணமாக ஆல்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஆற்றுத்திருவிழாவிற்காக, அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். போக்குவரத்து சீரமைப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.