Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வண்டியூர் பெருமாள் கோயிலில் ... களரி கருப்பண்ண சுவாமி, வீரபத்திர சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம் களரி கருப்பண்ண சுவாமி, வீரபத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை கோயிலில் புதிய தேருக்கு விரைவில் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை கோயிலில் புதிய தேருக்கு விரைவில் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
03:01

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டு வரும் தேருக்கு விரைவில் வெள்ளோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேரடியை மராமத்து செய்வதற்காக பழைய தேர் இடமாற்றம் செய்யப்பட்டது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது இரண்டு பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் ஒரு தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போதுள்ள பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும் புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆனந்தவல்லி அம்மனுக்கும் புதிதாக தேர் செய்யும் பணிகள் நடைபெற்று தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் புதிய தேருக்கான வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. கோயில் முன்பாக பழைய பெரிய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேரடி தளம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அதனை மராமத்து செய்வதற்காக அர்ச்சகர்கள் ராஜேஷ்,குமார் தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டு தேரை மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிரே உள்ள காலி இடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. மராமத்து பணிகள் முடிவடைந்த உடன் புதிய தேருக்கு பின்னால் பழைய தேர் நிற்பதற்கான பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar