களரி கருப்பண்ண சுவாமி, வீரபத்திர சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2026 05:01
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் கருப்பண்ண சுவாமி, வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
ராணி மங்கம்மாள் சாலையில் களரி கிராமம் அமைந்துள்ளது. களரி, ராமநாதபுரம் நாடார்களுக்கு பாத்தியப்பட்டது இக்கோயில். 13 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. காப்பு கட்டுதல், ரக்க்ஷாபந்தனம் கும்ப அலங்காரம், நவக்கிரக ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நாளை காலை 7:00 மணிக்கு சூரிய பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கருப்பண்ண சுவாமி, வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. கற்பக விநாயகர் சிலை பிரதிஷ்டை நடக்கிறது. இதனை தொடர்ந்து அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கருப்பண்ண சுவாமி மற்றும் வீரபத்திர சுவாமி கோயில் படிமாத்தார்கள் மற்றும் நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.