காட்டூர் சுப்பிரமணியர் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை: முருகனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 10:01
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு விநாயகர் -சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.