Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடி, கோடியாக வருமானம் வரும் ... மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்! மாதப்பூர் முத்துக்குமாரசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்திற்காக பழனிக்கு புறப்பட்ட 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தைப்பூசத்திற்காக பழனிக்கு புறப்பட்ட 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடிகள்

பதிவு செய்த நாள்

27 ஜன
2026
01:01

காரைக்குடி; குன்றக்குடியிலிருந்து பாரம்பரிய நகரத்தார் காவடிகள் நேற்று பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டது.


ஆண்டுதோறும் பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு, நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா வருகின்ற பிப்.1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடியை வந்தடைந்தனர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து, நேற்று காலை, இடும்பன் வேல் முன்னதாக செல்ல 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக சென்றனர். பிப். 3ம் தேதி காவடிகள் பழனிக்கு சென்றடைகிறது. பிப்.3ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.7ம் தேதி காலை, காவடி விடைபெற்று ஊர் திரு முதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதேபோல், பாரம்பரியமாக காவடிகள் எடுத்துச் செல்லும், 200 நாட்டார் காவடிகள் நேற்று குன்றக்குடியில் இருந்து பழனிக்கு புறப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar