பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, நேற்று, கொடியேற்று விழா நடந்தது.
பிப், 1, தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா நேற்று நடந்தது. காலை, 5.00 மணிக்கு, விநாயகர், நவகிரக வேள்வி வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தத்தால், கொடி மரத்துக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, தைப்பூசத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தைப்பூசத்தை முன்னிட்டு, காவடி ஆட்டம், தேர் திருவிழா உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன.