ஆட்டையாம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2026 11:01
அவிநாசி; ஆட்டையாம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மா விளக்கு ஊர்வலம்,தேர் பவனி மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கடந்த 20ம் தேதி பொட்டு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாவிளக்கு எடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் தேர் இழுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து கம்பம் பிடுங்குதல்,வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.